வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்
வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்
சுழல் விசைத் துளைக் கருவியைக் கொண்டு மணற்பாங்கான பகுதிகளில் ஆழ்துளைக் குழாய் கிணறு அமைக்க இயலும். இதற்கு தேவைப்படும் எரிபொருள், வேலையாட்கள் போன்றவற்றிற்கான செலவு சம்பந்தப்பட்ட விவசாயிகளைச் சார்ந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடின பாறைப் பகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்டல் மண் பகுதிகளில் ஆழ்துளைக் குழாய் கிணறு அமைக்க இயலும்.
நிலத்தடி நீர் ஆய்வுக் கருவிகள் மூலம் திறந்தவெளி கிணறு, குழாய்க் கிணறு மற்றும் ஆழ்துளை குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஏற்ற நிலத்தடி நீர் இருக்கக் கூடிய மண் படிவங்களின் அமைப்பினை கண்டறியலாம். இக்கருவி அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வாடகை அடிப்படையில் ஒரு ஆய்விற்கு ரூபாய் 500/- என்ற வீதத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.
திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்தவும், விவசாய நிலங்களில் உள்ள பாறைகளை தகர்ப்பதற்கு பயன்படுகிறது .
கைத்துளைக் கருவியைக் கொண்டு குறைந்த ஆழமுடைய குழாய்க் கிணறு அமைக்க இயலும். இவ்வியந்திரம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வாடகை அடிப்படையில் மீட்டருக்கு ரூபாய் 30/- என்ற வீதத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் வேலையாட்களை விவசாயிகள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.