வேளாண்மைப் பொறியியல் துறை நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி
நோக்கம்
- ✴ கிராமப்புர இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியினை அளித்து, அவர்களின் வேலைவாய்ப்பினை அதிகரித்தல், வருமான அளவை உயர்த்துதல், கிராமப்புரங்களின் மொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுதல்.
வயது வரம்பு
- ✴ டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி - 18 முதல் 35 வயது வரை
- ✴ வேளாண் இயந்திரங்கள் செயல்விளக்கப் பயிற்சி - 18 முதல் 35 வயது வரை
திட்டப் பகுதி
- ✴ அனைத்து மாவட்டங்கள்
பயிற்சி விவரம்
பயிற்சி 1:
பாடத்தின் தலைப்பு
|
டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி (Assistant Tractor Operator Training)
|
|
வயது வரம்பு |
18 - 35 |
|
பயிற்சி மையங்கள் |
வேளாண்மைப் பொறியல் துறைக்கு சொந்தமான வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, திருவாரூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆறு அரசு இயந்திர பணிமனைகள் |
|
கால அளவு |
210 மணி நேரம் - 8 மணி / நாள் - 27 நாட்கள் |
பயிற்சி 2:
பாடத்தின் தலைப்பு
|
வேளாண் இயந்திரங்கள் செயல்விளக்கப் பயிற்சி (Agricultural Machinery Demonstrator)
|
|
வயது வரம்பு |
18 - 35 |
|
பயிற்சி மையங்கள் |
வேளாண்மைப் பொறியல் துறைக்கு சொந்தமான வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, திருவாரூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆறு அரசு இயந்திர பணிமனைகள் |
|
கால அளவு |
128 மணி நேரம் - 8 மணி / நாள் - 16 நாட்கள் |
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் கிராமப்புர இளைஞர்கள் கோயம்புத்தூர், வேலூர், திருவாரூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலியிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் பணிமனைகளிலோ அல்லது அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகங்களிலோ தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பயன் பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.





