வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்குதல்
நோக்கம்
- ✴ அறுவடைக்குப்பின் சந்தைபடுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைத்தல், மற்றும் வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்கும் காலத்தை நீட்டித்தல்.
நிதி ஆதாரம்
- ✴ ஒன்றிய அரசு -60 %
- ✴ மாநில அரசு - 40 %
மானியம்
- ✴ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% அல்லது ஒன்றிய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை, இவற்றில் எது குறைவு அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை, இவற்றில் எது குறைவோ அத்தகை மானியமாக வழங்கப்படும். - ✴ ஆதிதிராவிட பழங்குடியின சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
திட்டப் பகுதி
- ✴ அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)
செயல்படுத்தப்படும் பணிகள்
- ✴ வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்களான
- 1.சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம்
- 2.சிறிய வகை மாவு அரைக்கும் இயந்திரம்
- 3.எண்ணெய் பிழியும் செக்கு
- 4.மிளகாய் துகளாக்கும் இயந்திரம்
- 5.நிலக்கடலை உடைக்கும் இயந்திரம்
- 6.தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம்
- 7.அரவை இயந்திரம் போன்றவற்றினை வாங்குவதற்கு மானியம் வழங்குதல்.
தகுதி
- ✴ தனிப்பட்ட விவசாயிகள்
அணுக வேண்டிய அலுவலர்
- ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை







